செய்திகள் :

உ.பி. வெள்ளப் பாதிப்பு: "கங்கை உங்களைச் சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்லும்" - பாஜக அமைச்சர் பேச்சு

post image

உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத், பாதிக்கப்பட்டவர்களிடம் கங்கை நதி உங்களைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருப்பது எதிர்க்கட்சிகளிடமிருந்து கடும் விமர்சனங்களைத் தூண்டியிருக்கிறது.

கடந்த சில நாள்களாக கங்கை மற்றும் யமுனா நதிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் உத்தரப்பிரதேசத்தின் கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத் - உத்தரப்பிரதேசம்
பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத் - உத்தரப்பிரதேசம்

இந்த நிலையில், அம்மாநில மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத் கடந்த திங்களன்று கான்பூர் தேஹாட் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்றிருக்கிறார்.

அங்குப் பாதிக்கப்பட்டவர்களிடம் சஞ்சய் நிஷாத் பேசும் வீடியோ ஒன்று நேற்றுமுதல் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் சஞ்சய் நிஷாத், "கங்கை புத்திரர்களின் பாதங்களைச் சுத்தம் செய்ய கங்கை நதி உங்களின் வீடு தேடி வந்திருக்கிறது.

இது நேராக உங்களைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும்" என்று கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களிடம் அமைச்சர் இவ்வாறு கூறியதற்கு சமாஜ்வாதி செய்தித் தொடர்பாளர் சர்வேந்திர பிக்ரம் சிங், "இத்தகைய பேச்சு அமைச்சரின் அக்கறையின்மையைக் காட்டுகிறது.

வெள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து கொண்டிருக்கும் நேரத்தில், இதுபோன்று அமைச்சர்கள் கூறுவது, கள யதார்த்தத்திலிருந்து அவர்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றது" என்று விமர்சித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கமல் ஹாசன்: "கீழடி முன்னெடுப்புக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்" - மோடியை சந்தித்த கமல்!

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள கமல் ஹாசன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் ஹாசன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தி... மேலும் பார்க்க

ரஷ்யா உடன் வர்த்தகம்: நெருக்கும் ட்ரம்ப் - முக்கியத்துவம் பெறும் புதினின் இந்திய வருகை!

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வருகை தருவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். புதினின் வருகை குறித்து ரஷ்யா தரப்பில் எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை. அஜித் தோவல... மேலும் பார்க்க

US Tariff: ரஷ்யாவுடன் வர்த்தகம் - இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏன்? - ட்ரம்ப் பதில்!

அமெரிக்காவின் அதிகபட்ச வரிவிதிப்பை எதிர்கொள்ளும் நாடாக மாறியிருக்கிறது இந்தியா. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி 25% வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டதுடன், 6ம் தேதி கூடுதலாக 25% வரியை விதித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப... மேலும் பார்க்க

'நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்தது இப்படித்தான்' - ஆதாரங்களை வெளியிட்ட ராகுல் | முழு விபரம்

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முதல் பீகாரில் இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சூழலில் அவசர அவசரமாக ஒரே மாதத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்... மேலும் பார்க்க

"இதற்கும் காங்கிரஸை குற்றம்சாட்ட முடியாது" - ட்ரம்ப் வரி குறித்து மல்லிகார்ஜுன கார்கே காட்டம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரியை இரட்டிப்பாக்கி நேற்று இந்தியாவிற்கு 50 சதவிகித வரியை அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரதமர் மோடியைச் சாடியும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது... மேலும் பார்க்க

PMK: "என் எதிரிகளை விட அசிங்கமான வேலையைச் செய்கிறார்" - அன்புமணியுடனான பிரச்னையை விவரிக்கும் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கு இடையே கட்சி நிர்வாகம் விவகாரத்தில் பல மாதங்களாக மோதல் நிலவிவருகிறது.இத்தகைய சூழலில் ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஐயா என்று அழைத்த... மேலும் பார்க்க