செய்திகள் :

ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த அரசுப்பள்ளி ஆசிரியர்.. அதிர்ச்சி பின்னணி

post image

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு Good touch, Bad touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் அரசு பள்ளி ஒன்றில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குப் பின்னர் பெண் காவலர்களை தனியாகச் சந்தித்துப் பேசிய 6 -ம் வகுப்பு மாணவி ஒருவர், அறிவியல் ஆசிரியர் தங்களிடம் உடல்ரீதியாக தொடர்ந்து அத்துமீறி வருவதாக புகார் கூறியிருக்கிறார்.

ஆசிரியர் செந்தில்குமார்

இதன் அடிப்படையில் அந்த மாணவி மற்றும் சக மாணவிகளிடமும் காவல்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளனர். இதில், அந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த செந்தில் குமார் என்பவர் 20 -க்கும் அதிகமான மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததைக் கண்டறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இது குறித்து ஆசிரியர் செந்தில் குமார் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அதிர்ச்சிப் பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், "கோத்தகிரியைச் சேர்ந்த 50 வயதான செந்தில்குமார், கடந்த 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த ஜூன் மாதம் தான் இந்த அரசு பள்ளியில் சேர்ந்திருக்கிறார்.

6 முதல் 8 -ம் வகுப்பு வரை அறிவியல் பாடம் நடத்தி வந்த இவர், மாணவிகளிடம்‌ தவறான தொடுதலில் ஈடுபட்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். முத்தமிடுதல், தவறான தொடுதல் என 21 மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததை உறுதி செய்தோம்.

ஆசிரியர் செந்தில்குமார்

ஒரு சில மாணவிகள் வெளியில் புகார் அளிக்க முயற்சி செய்வதை அறிந்து அவர்களை மிரட்டி வெளியே சொல்ல விடாமல் தடுத்து வந்திருக்கிறார். இதனால், அச்சமடைந்த மாணவிகள் இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளனர்.

நாங்கள் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் இந்த கொடூரம் வெளி வந்துள்ளது. ஆசிரியர் செந்தில் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். இவர் பணியாற்றிய மற்ற பள்ளிகளும் விசாரணை நடத்தப்படும். துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது " என்றார்.

மயிலாடுதுறை: த.வா.க கட்சி மாவட்ட செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை - பழிக்குப் பழியா... போலீஸ் விசாரணை!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் மணிமாறன். இவர் மயிலாடுதுறையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் காரைக்காலுக்கு சென்றுள்ளார். மயிலாடுதுறை அருகே உள்ள செ... மேலும் பார்க்க

`உங்கள் ஆட்சியிலாவது கந்துவட்டிக் கொடுமைக்கு...’ - விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த இளைஞர்

கந்துவட்டிக் கொடுமையால் தூக்குப் போட்டு தற்கொலைபுதுச்சேரி கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான விக்ரம், இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு மினி லாரி ஒன்றை வாங்கிய விக்ரம... மேலும் பார்க்க

கடலூர்: `காதலன் கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்!’ - கணவருக்கு கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண் காவலர்

கடலூரைச் சேர்ந்த சோனியா சென்னை ஆவடி ஆயுதப் படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தார். அப்போது இவருக்கும், அங்கு கார் ஓட்டுநராகப் பணியாற்றிய கடலூரைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக ம... மேலும் பார்க்க

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு: தலைமறைவான மாமியார் சித்ராதேவி கைது

திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. மகள் ரிதன்யா (27).ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி... மேலும் பார்க்க

``மேகாலயா சம்பவத்தை போல செய்தேன்..'' - திருமணமாகி 45 நாளில் கணவனை கொன்ற பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

மேகாலயாவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவரை அவரது மனைவி தேனிலவுக்கு அழைத்துச் சென்று கூலிப்படையை ஏவி படுகொலை செய்த சம்பவத்தை போன்று பீகாரில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மேகாலயா சம்பவத... மேலும் பார்க்க

சென்னை: காலையில் திருமணம் மாலையில் மாயம்; மணமகளைத் தேடும் குடும்பம்; என்ன நடந்தது?

சென்னை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் நாகவள்ளி. இவர் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் 2.7.2025-ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, "என் கணவர் பெயின்டிங் வேலை செய்து வருகிறார். என்னுடைய மகள் அர்ச்... மேலும் பார்க்க