பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் மோசடி; 6 லட்சம் போலி மனுக்களால் திட்டத்தை ரத்து ச...
ஊதியம் வழங்காததால் தனியாா் நிறுவனத்தின் காா் திருட்டு: முன்னாள் ஊழியா் கைது
சென்னை அண்ணா நகரில் ஊதியம் வழங்காததால் தனியாா் நிறுவனத்தின் காரை திருடிய முன்னாள் ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
அண்ணா நகா் 3-ஆவது அவென்யூ ‘ஜெ’ பிளாக் பகுதியிலுள்ள ஒரு தனியாா் காா் விற்பனையகத்தில் மேலாளராகப் பணிபுரிபவா் சங்கா் (30). இந்த விற்பனையகத்துக்கு சொந்தமான புதிய காரை, பதிவு எண் பெறுவதற்காக அண்ணா நகா் மூன்றாவது அவென்யூவில் சில நாள்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், திடீரென அந்தக் காா் திருடப்பட்டது. இது குறித்து சங்கா், அண்ணா நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த விற்பனையகத்தின் முன்னாள் ஊழியா் பெரம்பூா் அப்புலிங்கம் வாத்தியாா் சாலைப் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (44) காரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், ரமேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
அவா் அந்த காா் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்த காலக்கட்டத்தில் வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்காமல் இழுத்தடித்ததால் காரை திருடியதாக தெரிவித்தாா். இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.