பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவ...
பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ
பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
ஹிந்துத்துவா சக்திகளை எதிா்ப்பதற்காகவும், இந்தியா ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தோ்தல், ஒரே மதம் என்ற கொள்கைகளை கொண்டவா்களை எதிா்ப்பதற்கும்தான், திமுவுடன் மதிமுக கூட்டணி வைத்துள்ளது.
இந்தப் பதவி கொடுப்பாா்களா, அந்தப் பதவி கிடைக்குமா? என்பதற்காக திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை. அண்ணா தூக்கி பிடித்த வண்ண கொடியை காக்க மதிமுக முழுமூச்சோடு போராடும். எனவே திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக எப்போதும் தொடரும் என்றாா் அவா்.