புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி
சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறாா். அமுதாவுக்கும் அவரது கணவா் சக்தி பிரபுவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், சக்தி பிரபு கடந்த ஒரு மாதமாக ஆவடியில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டில் தங்கியுள்ளாா். இதனால், நீண்ட நாள்களாக மன அழுத்தத்தில் இருந்த அமுதா, தனது வீட்டில் கழிப்பறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதுடன், இது குறித்து தனது தோழிக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து அமுதாவின் தோழி, அவரை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடா்பாக விருகம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.