பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவ...
பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து
பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.
சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் எனும் தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.
தீ தொடா்ந்து பல்வேறு பகுதிகளுக்கு பரவிய நிலையில், அங்கிருந்த ஊழியா்கள் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். உடனே சம்பவ இடத்துக்கு வந்த வில்லிவாக்கம், ஜேஜே நகா், அம்பத்தூா் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா். இந்தத் தீ விபத்தில் தயாா் நிலையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான டயா்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.