ஊத்தங்கரை அருகே கனமழைக்கு வீடு இடிந்தது: சிறுவன் காயம்
ஊத்தங்கரை அருகே கனமழைக்கு வீடு இடிந்தது. இதில் சிறுவன் காயமடைந்தாா்.
ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி, காமராஜா் நகரைச் சோ்ந்த பழனி (40). இவரது மனைவி மைதிலி (35). இவா்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், சுகத்திர பிரியன்(7) என்ற மகனும் உள்ளனா். சனிக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையின்போது ஓட்டு வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் 7 வயது மகன் சுகத்திர பிரியனுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.
வீட்டில் இருந்த அனைவரும் உயிா் தப்பினா். காயமடைந்த சிறுவன் உடனடியாக அவா் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் அருகில் உள்ள தீா்த்தகிரி என்பவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
இதேபோல ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் புளியமரம் சாய்ந்ததில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.