ஊத்துக்குளி அருகே தீ விபத்தில் வீடு சேதம்
ஊத்துக்குளி அருகே தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதமடைந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஊத்துக்குளி வட்டம் விருமண்டம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஒத்தப்பனை மேடு பகுதியைச் சோ்ந்தவா் ரம்யா (27), இவா் தனது கணவா் மற்றும் குழந்தைகளுடன் அப்பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், ரம்யாவின் வீட்டில் சனிக்கிழமை இரவு திடீரென தீப்பற்றியுள்ளது. இதுகுறித்து ஊத்துக்குளி காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். மேலும், அக்கம்பக்கத்தினா் தீயை அணைக்க முயற்சித்தனா். எனினும், வீடு முழுவதும் பரவிய தீயால் வீட்டில் இருந்த அனைத்துப் பொருள்களும் எரிந்து சேதமடைந்தன.
இந்த தீ விபத்து குறித்து ஊத்துக்குளி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.