செய்திகள் :

எங்களது வாழ்க்கையின் சிறந்த பரிசு..! தாயாகும் நடிகை கியாரா அத்வானி!

post image

நடிகை கியாரா அத்வானி விரைவில் குழந்தை பிறக்கவிருப்பதாக தனது இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார்.

201இல் ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படத்தின் மூலம் ஹிந்தி நடிகை கியாரா அத்வானி பிரபலமானார். அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமிக்கிலும் நடித்து புகழ் பெற்றார்.

சமீபத்தில் ஷங்கர் இயக்கிய ராம்சரண் படத்தில் நடித்திருந்தார். 2023இல் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் திருமணம் நடைபெற்றது.

தற்போது, நடிகை கியாரா அத்வானி தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

குழந்தைகளின் காலணிகளை பதிவிட்டு கியாரா, “ எங்களது வாழ்க்கையின் சிறந்த பரிசு. விரைவில் வரவிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

நடிகைகள் வாழ்த்து

இதற்கு சமந்தா, “ஓ மை காட். வாழ்த்துகள்” என கமெண்ட் செய்துள்ளார்.

பல நடிகர், நடிகைகள் கியாரா, சித்தார்த் தம்பதிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

எம்புரான் பட டப்பிங் பணியில் மஞ்சு வாரியர்!

எம்புரான் படத்தின் டப்பிங் பணியில் நடிகை மஞ்சு வாரியர் ஈடுபட்டுள்ளார். நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்... மேலும் பார்க்க

துருவ நட்சத்திரம்: வெளியீட்டு தேதி அறிவித்த இசையமைப்பாளர்

நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீடு குறித்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி, 7 ஆண்டுகளுக்கும் ம... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி டீசர் வெளியானது!

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் 94 வினாடி கொண்ட டீசர் வெளியானது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகி, ர... மேலும் பார்க்க

கூலி படத்தில் நடிக்கிறேனா? சந்தீப் கிஷன் விளக்கம்!

கூலி படத்தில் சந்தீப் கிஷன் நடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்க... மேலும் பார்க்க

புதிதாய் தொழில் தொடங்கிய சின்ன திரை ஜோடி!

மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா தம்பதியினர் புதிய தொழில் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.வானொலியில் தொகுப்பாளராக இருந்து சின்ன திரையில் அறிமுகமானவர் மிர்ச்சி செந்தில். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பா... மேலும் பார்க்க

கணவரை விவாகரத்து செய்த வாரிசு பட நடிகை!

வாரிசு படத்தின் மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.சிறுவயதில் இருந்தே மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த சம்யுக்தா, நடிகை ராதிகா இயக்கிய சந்திரகுமாரி த... மேலும் பார்க்க