செய்திகள் :

`எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்' - குணால் கம்ராவை கைது செய்ய சிவசேனா அமைச்சர் கோரிக்கை

post image

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து வெளியில் வந்ததை சித்திரிக்கும் விதமாக, அவரை துரோகி என்று விமர்சித்து காமெடி நடிகர் குணால் கம்ரா காமெடி ஷோவில் பாடினார். மும்பையில் இக்காமெடி ஷோ நடந்த ஸ்டூடியோவை சிவசேனாவினர் அடித்து உடைத்தனர். இவ்விவகாரத்தில் குணால் கம்ரா மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி இரண்டு முறை சம்மன் அனுப்பி இருக்கின்றனர். ஆனால் அவரைக் கைதுசெய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருக்கிறது. இதையடுத்து அவரை உடனே கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் மும்பைக்கு வராமல் தொடர்ந்து வெளியில் தங்கி இருக்கிறார்.

குணால் கம்ரா

இது குறித்து சிவசேனா அமைச்சர் சம்புராவ் தேசாய் கூறுகையில், ''அமைதியாக இருக்கும்படி ஷிண்டே எங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே அமைதியாக இருக்கிறோம். குணால் கம்ரா எங்கு மறைந்திருந்தாலும் அவரை எப்படி இழுத்து வரவேண்டும் என்று சிவசேனா தொண்டர்களுக்குத் தெரியும்.

நான் அமைச்சர் என்பதால் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டியிருக்கிறது. அதற்காக எங்களது பொறுமையை சோதிக்கவேண்டாம். அவர் எங்கிருந்தாலும் அவரைப் பிடித்து வந்து அவருக்குத் தண்டனை கொடுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்றத்திலும் குணால் கம்ரா மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. குணால் கம்ராவிற்கு நாடு முழுவதும் ஆதரவும் பெருகி இருக்கிறது.

அவர் மீது மகாராஷ்டிரா அரசு தொடர்ந்துள்ள வழக்குகளை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்த உலகம் முழுவதும் இருந்து அவரது ரசிகர்கள் குணால் வங்கிக் கணக்கிற்கு தொடர்ந்து நேரடியாக பணம் அனுப்பி வருகின்றனர். இது வரை 5 கோடி ரூபாய் வரை அவரது வங்கிக் கணக்கிற்கு பணம் வந்திருக்கிறது.

குணால் கம்ரா 2013ம் ஆண்டில் இருந்து மேடை காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தொடர்ந்து காமெடி மூலம் அனைவரையும் விமர்சித்து வருகிறார். அவர் கொலை மிரட்டல்களை இதற்கு முன்பும் எதிர்கொண்டிருக்கிறார். 2020ம் ஆண்டு பத்திரிகையாள்ர் அர்னாப் கோஸ்வாமியுடன் ஒரே விமானத்தில் பயணம் செய்தபோது அவருடன் குணால் பேச முயன்றார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் குணால் தங்களது விமானத்தில் பறக்க தடை விதித்தது.

தண்ணீர் எடுப்பதற்காக குதிரைகளை 200 ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்கும் கிராமவாசிகள்! - எங்கு தெரியுமா?

கிராமத்திற்குத் தண்ணீர் விநியோகிப்பதற்காக குதிரைகள் வாடகைக்கு எடுக்கின்றனர். எங்கு இவ்வாறு நடக்கிறது என்பதை பார்க்கலாம்.உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகரின் பங்லி கிராமம் தங்களின் அன்றாட தேவைகளுக்கான தண... மேலும் பார்க்க

Ghibli Art: 40 ஆண்டுகளாக இருக்கும் `ஜிப்லி ஆர்ட்' - திடீரென இணையவாசிகளிடம் டிரெண்டானது எப்படி?

சமூக வலைதளங்களில் தற்போது ஜிப்லி ஆர்ட் என்ற பெயரில் டிரண்டாகி வரும் அனிமேஷன் புகைப்படங்களை பார்த்திருப்போம். 1985லேயே இது போன்ற அனிமேஷன்கள் உருவாக்கப்பட்ட நிலையில், திடீரென இணையவாசிகள் மத்தியில் பிரபல... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவனை மாட்டிவிட்ட மனைவி

வாட்ஸ்ஆப்பில் பல தனிப்பட்ட ரகசியங்கள் இருக்கும் என்பதால் பலரும் அதற்கு லாக் போட்டு வைப்பது வழக்கம். வீட்டில் மனைவிமார்கள் தங்களது கணவனின் வாட்ஸ்ஆப்பை பார்க்க விரும்பினாலும் அதனை கணவன்மார்கள் பார்க்க அ... மேலும் பார்க்க

Madhapar: ரூ.7000 கோடி வங்கிக்கணக்கில் வைத்திருக்கும் குஜராத் கிராமம்; சுவாரஸ்ய பின்னணி!

ரூ.700 கோடி வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக வைத்திருக்கும் பணக்கார கிராமத்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.குஜராத்தின் போர்பந்தர் நகரத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம்தான் மாதபர்.... மேலும் பார்க்க

சீனா: அவசர நேரத்தில் அம்மாவுக்குப் பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்; நெகிழ வைத்த நிகழ்வு!

தாய்க்கு எதிர்பாராத விதமாகப் பிரசவ வலி ஏற்பட்ட போது, துணிச்சலுடன் செயல்பட்டு பிரசவம் பார்த்து தனது தம்பி பூமிக்கு வர உதவியிருக்கிறார் 13 வயது சிறுவன். மருத்துவப் பணியாளர் மொபைலில் தொடர்பில் இருக்கும்ப... மேலும் பார்க்க

`இது கிராமமா கேன்சர் மண்டலமா?’ - அதிர்ச்சியில் ஆந்திர அரசு - விளக்கம் தரும் மருத்துவர்

இது கிராமமா அல்லது இந்தியாவின் புற்றுநோய் மண்டலமா என்று தகவல் தெரிந்த பலரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலபத்ரம் என்கிற சிறு கிராமம். அப்படி ... மேலும் பார்க்க