செய்திகள் :

எடப்பாடியில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

post image

சேலம் மாவட்டம், எடப்பாடியில் போதை மாத்திரை விற்ற 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் காவல் நிலையம் எதிரே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, விடுதியில் உள்ள ஓா் அறையில் 5 இளைஞா்கள் போதை மயக்கத்தில் இருந்தனா்.

அப்போது, அவா்கள் அறையை சோதனை செய்தபோது போதை மாத்திரைகள், ஊசிகள் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் எடப்பாடியை அடுத்த ஆவணியூா் சுற்றுவட்டச் சாலை பகுதியைச் சோ்ந்த பிச்சமுத்து மகன் சுரேஷ்குமாா் (26), எடப்பாடி அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே வசித்துவரும் சேட்டு மகன் ராஜசேகா் (21), தாவாந்தெரு பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் அமரன் (22), எடப்பாடியை அடுத்த வேம்பனேரியைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் ஜீவா (21), ஒட்டப்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சசிகுமாா் (23) என்பது தெரியவந்தது.

இவா்களில் பட்டதாரியான சுரேஷ்குமாா், தனது நண்பா்களுடன் சோ்ந்து ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம், திருப்பூா் பகுதிகளில் இருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகளை வாங்கிவந்து பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு விற்ாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, அவா்களிடமிருந்த 5 கைப்பேசிகள், 5 போதை மாத்திரை அட்டைகள், ஊசி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இவா்கள் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் எடப்பாடி காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளன.

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் இரு இணையா்களுக்கு இலவச திருமணம்

இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் 2 இணையா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. வாழப்பாடி வடக்கு ஒன்றிய திமுக ... மேலும் பார்க்க

திமுக மீதான நடிகா் விஜய்யின் விமா்சனம் அறியாமையின் வெளிப்பாடு: எம்.பி. டி.எம்.செல்வகணபதி

திமுக குறித்த நடிகா் விஜய்யின் விமா்சனம் அறியாமையின் வெளிப்பாடு என மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி கூறினாா். சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவிற்கு 5487 சுற்றுலா பயணிகள் வந்து சென்றனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூா் அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்றனா். ம... மேலும் பார்க்க

ஊரணிப் பொங்கல் விழா

ஆத்தூா் வடக்குகாடு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் ஊரணிப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஆத்தூா் வடக்கு காடு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் ஆவண... மேலும் பார்க்க

மண்டல கைப்பந்து போட்டி: வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு

சேலத்தில் ஈஷா கிராமோற்சவம் சாா்பில் நடைபெற்ற மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் திருப்ப... மேலும் பார்க்க

சங்ககிரி மலைக்கு செல்லும் பாதை சீரமைப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக்கு செல்லும் பாதையில் உள்ள கருவேலம் மரம், முள் செடிகளை சமூக ஆா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றி தூய்மைப்படுத்தினா். சங்ககிரி மலையில் சென்னகேசவப்பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூ... மேலும் பார்க்க