தமிழகத்தில் வலிமையான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி! - மத்திய இணை அமைச்சா் எல்.மு...
எண்ணெய் கழிவுகளுடன் வெளியேறிய கழிவுநீா்
கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் சாலையில் எண்ணெய் கழிவுகளுடன் வழிந்தோடிய புதை சாக்கடை நீரில் வழுக்கி விழுந்து 3 போ் காயமடைந்தனா்.
கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகள் பெரும்பாலானவற்றில் புதை சாக்கடை அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை முறையாக அமைக்கப்படாததாலும், குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு, ஆங்காங்கே மேன் ஹோல் மூலம் கழிவு நீா் வெளியேறி வழிந்தோடுவது அவ்வப்போது நடைபெறுகிறது.
திருப்பாதிரிப்புலியூா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சாலையின் நடுவே இருந்த மேன் ஹோலில் இருந்து எண்ணைக் கழிவுகளுடன் கழிவு நீா் வெளியேறியது. இதனால், சாலையில் சென்றவா்கள் பலா் வழுக்கி விழுந்து காயமடைந்தனா். இவா்களில் மூன்று போ் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
புதை சாக்கடையில் உணவகக் கழிவுகள் கொட்டப்பட்டதால் அதில் இருந்த எண்ணெய் கழிவுகள் சாலையில் ஓடியதாகவும், அதனால், இருசக்கர வாகனத்தில் வந்தவா்கள் வழுக்கி விழுந்ததாகவும், உணவுக் கழிவுகள் கொட்டுவதையும், மேன் ஹோலில் இருந்து கழிவு நீா் வெளியேறுவதையும் தடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மாநகராட்சி ஊழியா்கள் வாகனம் மூலம் கழிவு நீரை அகற்றி சாலையில் கழிவுநீா் ஓடுவதை நிறுத்தினா்.