BB Tamil 8 Exclusive: சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? - மனம் திறக்கும் விஷ்ணு
எதிர்நீச்சல் மதுமிதாவின் அய்யனார் துணை தொடரின் முன்னோட்டக் காட்சி!
எதிர்நீச்சல் தொடரில் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த மதுமிதா நடிக்கும் அய்யனார் துணை தொடரின் முன்னோட்டக் காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நாயகியாக நடிகை மதுமிதா நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் அவரே நாயகியாக நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், எதிர்நீச்சல் 2 ஆம் பாகத்தின் தான் நடிக்கவில்லை என்று அவரே பதிவிட்டு இருந்தார். இவரின் பதிவு ரசிகர்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நடிகை மதுமிதா அய்யனார் துணை என்ற புதிய தொடரில் நாயகியாக நடிக்கிறார். இத்தொடரில் இவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் பிரபலம் அரவிந்த் சேஜு நடிக்கிறார்.
இதையும் படிக்க: தொடங்கிய முதல் வாரத்திலேயே டிஆர்பியில் அசத்தும் எதிர்நீச்சல் - 2 தொடர்!
மேலும், இத்தொடரில் அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தி பாத்திரத்தில் நடித்த ரோசரி, இத்தொடரில் அரவிந்தின் தந்தையாக நடிக்கிறார்.
நான்கு சகோதர்கள் உள்ள தாய் இல்லாத வீட்டில் மூத்த மருமகளாக வரும் நாயகி(மதுமிதா), கூட்டு குடும்பத்தில் அவர் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதையாக இருக்கும் என முன்னோட்டக் காட்சியின் மூலம் தெரிகிறது.
அய்யனார் துணை தொடரின் முன்னோட்டக் காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், இத்தொடரின் ஒளிபரப்பு தேதி, ஓளிபரப்பு நேரம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.