செய்திகள் :

"எதையும் மாற்றிப் பேசவில்லை; எந்தக் கட்சியையும் அழித்து வளர மாட்டோம்" - அண்ணாமலை

post image

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கூட்டணி குறித்து நான் பேச முடியாது. உள்துறை அமைச்சரின் கருத்தையே இறுதியாக எடுத்துக் கொள்ளுங்கள். தேசிய ஜனநாயக கூட்டணி, தென் தமிழகத்தில் ஒரு மாதிரியாகவும், கொங்கு மண்டலத்தில் ஒரு மாதிரியாகவும் இருக்கும்.

அண்ணாமலை

இதுகுறித்து டெல்லியில் பேசியுள்ளோம். தமிழகத்தில் ஐந்து மண்டலங்களில், மூன்று மண்டலங்களில் வெற்றி பெற்றால் தான் ஆட்சிக்கு வர முடியும். கட்சியின் தலைவராக அதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

கூட்டணி குறித்து எங்கள் தலைவர்கள் சரியான முடிவு எடுப்பார்கள். அவர்களிடம் சொல்ல வேண்டியதை நான் சொல்லிவிட்டேன். அண்ணாமலை எதையும் மாற்றி பேசுபவன் கிடையாது. எனக்கு பாஜக முதன்மையானது.

பாஜக

பாஜகவின் எல்லா முடிவுகளும் தொலைநோக்குப் பார்வையுடன் இருக்கும். என்னால் யாருக்கும் எந்த பிரச்னையும் இருக்காது. நான் மாறி மாறி பேசுபவன் கிடையாது. என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பாஜகவின் வளர்ச்சி மட்டுமே எனக்கு முக்கியம்.

அதிமுகவில் இருக்கும் பிரச்னைக்குள் செல்ல விரும்பவில்லை. பாஜக எதற்காக மற்றொரு கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டும். எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார். பாஜக இன்னொரு கட்சியை அழித்து வளரும் என்றால், பாஜகவும் அழிந்துவிடும் என்று தான் சொல்லி வருகிறேன்.

எடப்பாடி பழனிசாமி

பாஜக எந்தக் கட்சியையும் அளித்து வராது. ஐபிஎஸ் ரேங்கில் என்னுடைய ரேங்க் 2.  சொந்தமாக நின்று நிலைத்து பேசுபவன் நான். எனக்கு கொஞ்சம் வாய் பேச்சு, குறும்பு அதிகம். தன்மானம் கொஞ்சம் அதிகம். வைராக்கியம் அதிகம். நான் இங்கு பவருக்காக வரவில்லை.” என்றார்.

Waqf Bill: "இஸ்லாமியர் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சி" - நாடாளுமன்றத்தில் ஆ.ராசா பேச்சு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வக்ஃப் சட்டத் திருத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றிருந்த திமுக எம்.பி ஆ.ராசா, சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்ட... மேலும் பார்க்க

'அவரைக் கூப்பிடாதீங்க'னு எல்லார்கிட்டயும் சொல்லியிருக்காராம்’ - தாடி பாலாஜி vs தவெக பஞ்சாயத்து

ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்தவர் நடிகர் தாடி பாலாஜி. விஜய் தமிழகவெற்றி கழகத்தைத் தொடங்கியதும்,அதில்சேர ஆர்வம் காட்டி வந்தார். கள்ளக்குறிச்சியில் நடந்த தவெக-வின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டார்.... மேலும் பார்க்க

`என் சிறுநீரகம் ரூ.75000, கல்லீரல் ரூ.90000'- கடனை அடைக்க உறுப்புகளை விற்கப்போவதாக விவசாயி போராட்டம்

மகாராஷ்டிராவில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். நாட்டிலேயே அதிக விவசாயிகள் தற்கொலை செய்யும் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் கடன் தள்ள... மேலும் பார்க்க

Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்கு முதல்வர் கடிதம்

வக்ஃப் சட்டதிருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் ஓரணியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சட்டதிருத்த மசோதாவ... மேலும் பார்க்க

Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா காட்டம்

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், சூழலைப் பொறுத்து கூடுதல் நேரம் விவாதிக்கப்படும் என்றும்... மேலும் பார்க்க

கச்சத்தீவு : ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்... ஆனாலும் அனல் பறந்த விவாதம் - நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத்தில் நெடுநாள் பிரச்னையான கச்சத்தீவு விவகாரத்தில் முதலமைச்சரின் தனித் தீர்மானம் இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானதுக்கு பாஜக சார்பில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்து... மேலும் பார்க்க