செய்திகள் :

எனது வெற்றிக்குக் காரணம் என்னுடைய அம்மா; சச்சின் டெண்டுல்கர் அன்னையர் தின வாழ்த்து!

post image

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் அவரது அம்மா ரஜ்னி டெண்டுல்கருக்கு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:கேப்டன் ரோஹித் சர்மாவை ஈடுசெய்யவே முடியாது: மைக்கேல் கிளார்க்

இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: நான் தொடங்கும் அனைத்து விஷயங்களும் என்னுடைய அம்மாவின் பிரார்த்தனையுடனும், அவரது வலிமையுடனும் தொடங்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் அவர்களது அம்மா பக்கபலமாக இருப்பது போன்று என்னுடைய அம்மாவும் எனக்கு எப்போதும் ஊக்கம் அளிப்பவராக இருந்துள்ளார். நம்பமுடியாத அளவுக்கு குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் அம்மாக்கள் அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ள சச்சின் டெண்டுல்கர், சர்வதேசப் போட்டிகளில் 34,357 ரன்கள் குவித்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான வீரராக அவர் இன்றும் நீடிக்கிறார்.

இந்திய அணிக்காக 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்கள் குவித்துள்ளார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 15,921 ரன்கள் எடுத்துள்ளார்.

அதிக ஆட்டநாயகன் விருதுகள், அதிக அரைசதங்கள், அதிக ஃபோர்கள் போன்ற அவரது கிரிக்கெட் சாதனைகள் இன்னும் யாராலும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“ரன்களையும் தாண்டி...” விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோல... மேலும் பார்க்க

ஆஸி. பந்துவீச்சாளர்களும்.. வான் பாதுகாப்பு அமைப்பும்..! லெஃப்டினன்ட் ஜெனரல் புகழாரம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா முறியடித்தது குறித்து தலைமை இயக்குநர் லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கயி இன்று (மே 12) பிற்பகலில் நடைபெற்ற செய்தியாளர் சந்த... மேலும் பார்க்க

ஒரு சகாப்தத்தின் முடிவு: கிரிக்கெட் உலகின் பாராட்டு மழையில் விராட் கோலி!

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுதவாக விராட் கோலி அறிவித்துள்ளதையடுத்து, ஒரு சகாப்தம் முடிவுக்கு வருவதாக கிரிக்கெட் உலகம் அவரை பாராட்டி வருகிறது.இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோல... மேலும் பார்க்க

பிடித்தமானவர்களில் ஒருவர் விராட் கோலி.! புகழாரம் சூட்டிய லெப்டினன்ட் ஜெனரல்!

இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் தடுப்பாட்டத்தை இந்திய ஆயுதப்படைகளில் பாதுகாப்புடன் ஒப்பிட்டு லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கயி புகழாரம் சூட்டியிருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் ... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான டி20 தொடர் நடைபெறுமா?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால், வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான டி20 நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்... மேலும் பார்க்க