எம்எல்சி கோப்பையை வென்ற எம்ஐ நியூ யார்க்..! 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!
அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் கோப்பையை எம்ஐ நியூ யார்க் அணி வென்றுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டிகள் கடந்த ஜூன் 12 முதல் தொடங்கி நேற்று இரவுடன் முடிவடைந்தது.
இறுதிப் போட்டியில் எம்ஐ நியூ யார்க் அணியும் வாஷிங்டன் ஃபிரீடம் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எம்ஐ நியூ யார்க் அணி 180/7 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக டி காக் 77 ரன்கள் எடுத்தார்.
அடுத்து பேட்டிங் செய்த வாஷிங்டன் ஃபிரீடம் அணி 20 ஓவர்களில் 175/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூ யார்க் அணி வென்றது.
இந்த அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 70, க்ளென் பிலிப்ஸ் 48 ரன்கள் எடுத்தார்கள். கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவையான போது 6 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய நியூ யார்க் வீரர் ருஷில் உகார்கர் ஆட்ட நாயகனாகவும் வாஷிங்டன் ஃபிரீடம் அணியின் மிட்செல் ஓவன் தொடர் நாயகனாகவும் தேர்வாகினர்.
எம்ஐ நியூ யார்க் அணி 2-ஆவது முறையாக எம்எல்சி கோப்பையை வென்றுள்ளது.