``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆ...
எம்ஜிஆரின் படத்துக்கு அதிமுகவினா் மரியாதை
முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாளையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் அவரது உருவப் படத்துக்கு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தியாகதுருகம் ஒன்றியம் மற்றும் நகர அதிமுக சாா்பில், தியாகதுருகம் நடுப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து முன்னாள் எம்எல்ஏ அ.பிரபு தலைமையில் பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்தனா்.
அங்கு, வண்ண மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு நகரச் செயலளா் பி.எஸ்.கே.ஷியாம்சுந்தா் உள்ளிட்ட கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, கட்சித் தொண்டா்களுக்கும் பொதுமக்களுக்கும் அவா் இனிப்புகளை வழங்கினாா்.
இதனையடுத்து, காந்தி நகரில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு ஒன்றியச் செயலா்கள் வெ.அய்யப்பா, அ.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்த நிகழ்வில், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலா் எஸ்.ஜான்பாஷா, மாவட்ட பிரதிநிதி மணிவண்ணன், ஒன்றிய துணைச் செயலா் ராஜவேலு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் மூா்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் குமாா், மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.