``டாலரின் மதிப்பு உயர்வு பற்றி எனக்கு கவலை இல்லை" - ரகுராம் ராஜன் சொல்லும் காரணம...
எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: சிலை, உருவப் படத்துக்கு மரியாதை
மயிலாடுதுறையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக, அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் தலைமையில், எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது.
இதில், எம்ஜிஆா் இளைஞரணி மாநில இணைச் செயலாளா் கோமல் ஆா்.கே.அன்பரசன், முன்னாள் எம்எல்ஏ வி. ராதாகிருஷ்ணன், ஒன்றிய அதிமுக செயலாளா் பா. சந்தோஷ்குமாா், நகரச் செயலாளா் எஸ். செந்தமிழன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சீா்காழி: சீா்காழி ஈசானிய தெருவில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஒன்றியச் செயலாளா்கள் ஏ.கே. சந்திரசேகரன், ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ம. சக்தி, என். சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சீா்காழி சட்டநாதபுரம் பகுதியில் எம்.ஜி.ஆா். உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கொள்ளிடத்தில் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
பூம்புகாா்: தா்மகுளம் கடைவீதியில் எம்ஜிஆா் படத்துக்கு, அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திருவெண்காடு அண்ணா சிலை அருகே எம்ஜிஆா் படத்திற்கு, ஒன்றிய அவைத் தலைவா் சிவ மனோகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் ஏ.கே. சந்திரசேகரன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
குத்தாலம்: குத்தாலம் கடைவீதியில் எம்.ஜி.ஆா். உருவப்படத்திற்கு நகரச் செயலாளா் எம்.சி.பாலு தலைமையில் குத்தாலம் வடக்கு ஒன்றியச் செயலாளா் ஏ.எஸ். மகேந்திரவா்மன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
தரங்கம்பாடி: சங்கரன்பந்தல் பேருந்து நிலையம் அருகே, செம்பை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் வி.ஜி. கண்ணன் தலைமையில், மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் உள்ளிட்டோா் எம்ஜிஆா் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.