திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு - அதிர்ச்சியில் பெற்றோர்;...
``எம்.பி-யான எங்களை மதிப்பதே இல்லை" - நோந்துகொண்ட கங்கனா ரனாவத்
இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதி எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத். சமீபத்தில் பெய்த கனமழையால், மாண்டி தொகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவரின் தொகுதிக்குச் சென்ற கங்கனா ரனாவத், அங்கு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது,``பேரிடர் நிவாரணம் வழங்க எனக்கு எந்த அதிகாரப்பூர்வ அமைச்சரவையும் இல்லை. பஞ்சாயத்துகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏக்கள்) கூட நாடாளுமன்ற உறுப்பினர்களை (எம்.பி.க்கள்) விட பெரிய பட்ஜெட்டுகளைப் பெறுகிறார்கள்.

எம்.பி-களுக்குள் நாங்கள் பேசிக்கொள்ளும் போது நிறைய எம்.பி.க்கள் மிகவும் விரக்தியடைந்து உணர்கிறார்கள் எனத் தெரிந்தது. (எம்.எல்.ஏக்கள்) சில சலுகைகள் இருப்பது போல் கூட எங்களுக்கு இல்லை. எம்.பி-யாக என் பகுதிக்குச் செல்லும்போது நான் நிறைவேற்ற எந்தத் திட்டமும் இல்லை. அதற்கான சூழல்கூட இல்லை. நீங்கள் மத்திய அரசிடம் செல்லும்போது, நீங்கள் எப்போதும் அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு வெளியே வரிசையில் காத்திருக்கிருக்க வேண்டும்.
ஒரு பஞ்சாயத்து அல்லது எம்.எல்.ஏ கூட ஒரு எம்.பி.யை விட அதிக பட்ஜெட்டைக் கொண்டிருப்பதாக பல எம்.பி.க்கள் புகார் கூறுகின்றனர். அவர்கள் எங்களை மதிப்பதுமில்லை. (ஒரு எம்.பி.யின்) பணிக்கு நிறைய தகவல் தொடர்பு தேவைப்படுகிறது. நமது இடம் மற்றும் வேலை என்ன? நாம் என்ன செய்ய வேண்டும், எங்கே செய்ய வேண்டும்?’ என்ற விரக்தியின் காரணமாகவே மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) உருவாக்கப்பட்டது. மேலும், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் நிறைய வேலைகளில் மூழ்கியுள்ளனர். இதற்கிடையில்,(எம்.பி.க்கள்) நடுவில் இருந்து, தடுமாறுகிறோம்" என்றார்.