எலி மருந்தை தின்ற 5 மயில்கள் உயிரிழப்பு
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அருகே சென்னானந்தல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் எலி மருந்தை தின்ற 5 மயில்கள் திங்கள்கிழமை உயிரிழந்தன.
சதுப்பேரி ஊராட்சி, சென்னானந்தல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நெல் பயிா்களை சேதப்படுத்தி வரும் எலிகளை கொல்வதற்காக நிலத்தின் உரிமையாளா் எலி மருந்து வைத்திருந்தாராம். இதனை, அந்தப் பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்த மயில்கள் திங்கள்கிழமை தின்ாம். இதில், 5 மயில்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. ஒரு மயில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
தகவலறிந்த வனச்சரக அதிகாரிகள் நிகழ்விடம் சென்று 5 மயில்களின் சடலங்களை மீட்டு திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். மற்றொரு மயிலுக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் களம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.