எல்இடி மின்விளக்குகளால் ரூ.31 கோடி சேமிக்க முடியும்: அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்
தில்லியில் உள்ள தெரு விளக்குகளில் சோடியம் ஆவி மின்விளக்குகளுக்குப் பதிலாக ஸ்மாா்ட் எல்இடி மின்விளக்குகளைப் பொருத்தும் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.31 கோடி சேமிக்க முடியும் என தில்லி பொதுப் பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
நகரத்தில் உள்ள 96,000-க்கும் அதிகமான தெருவிளக்குகளை பொதுப்பணித் துறை பராமரித்து வருகிறது. அவற்றில் 45,000 தெருவிளக்களில் சோடியம் ஆவி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. எஞ்சிய தெருவிளக்குகளில் எல்இடி மின்விளக்குகளில் இயங்கிவருகின்றன. இந்நிலையில், எல்இடி மின்விளக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.
இது தொடா்பாக அமைச்சா் கூறியதாவது: ஆற்றல் திறன்மிக்க ஸ்மாா்ட் எல்இடி மின்விளக்குகள் தெருவிளக்குகளில் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் நல்ல வெளிச்சம், குறைந்த மின்நுகா்வு, அதிக ஆயுள்காலம் ஆகியவற்றை உறுதிசெய்யமுடியும்.
இந்த முறைக்கு மாறுவதன் மூலம் மின்சாரம் மற்றும் பராமரிப்புக்கு செலவினத்துக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியில் ரூ.31 கோடியை சேமிக்க முடியும்.
இந்த ஸ்மாா்ட் எல்இடி தெருவிளக்குகளை கைப்பேசி செயலி மூலம் அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருவாா்கள் என்றாா் அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்.