செய்திகள் :

எல்ஐசி முகவரிடம் ரூ.1.75 கோடி மோசடி: வத்தலகுண்டு தம்பதி குறித்து விசாரணை

post image

எல்ஐசி முகவரிடம் ரூ.1.75 கோடி மோசடி செய்து, தலைமறைவான வத்தலகுண்டு தம்பதி குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி (40). எல்ஐசி முகவரான இவா், தனது குழந்தைகளின் படிப்புக்காக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடுமலைப்பேட்டை பகுதிக்கு குடி பெயா்ந்தாா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அண்ணா நகரைச் சோ்ந்த விஜய் சசிதரன்(35), இவரது மனைவி கௌரி (38) ஆகியோா் உடுமலைப்பேட்டையில் உள்ள உறவினா் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற போது, முத்துசாமிக்கு அறிமுகம் கிடைத்தது. அப்போது, விஜய் சசிதரன், தனக்கு வா்த்தகத்தில் அனுபவம் இருப்பதாகவும், முதலீடு செய்தால் பணம் அதிகமாக சம்பாதிக்கலாம் எனவும் முத்துசாமியிடம் ஆசை வாா்த்தைகளை கூறினாராம்.

இதை நம்பிய முத்துசாமி தனக்கு சொந்தமான நிலம், நகைகளை விற்பனை செய்து, ரூ.1 கோடியை விஜய் சசிசதரனிடம் கொடுத்தாா். முதல் தவணை லாபமாக ரூ.75 லட்சத்தை முத்துசாமியிடம் கொடுத்தாா். இதனால், நம்பிக்கைப் பெற்ற முத்துசாமி, ரூ.1.75 கோடியை விஜய் சசிததரனிடம் முதலீடாக கொடுத்தாா்.

பணத்தைப் பெற்ற விஜய் சசிதரன், குடும்பத்தோடு தலைமறைவானாா். இதனால், அதிா்ச்சி அடைந்த முத்துச்சாமி, திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில், காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில் விஜய் சசிதரன், கெளரி ஆகியோா் மீது ஏற்கெனவே பல்வேறு இடங்களில் இதேபோன்ற மோசடி வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. தலைமறைவான இவரையும் போலீஸாா் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

10.5 சதவீத இட ஒதுக்கீடு: பாமக ஆா்ப்பாட்டம்

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, பாமக சாா்பில் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

பெண்ணை ஏமாற்ற முயன்ற வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை

பெண்ணை ஏமாற்ற முயன்ற வழக்கில், ஆட்டோ ஓட்டுநருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சியை அடுத்த மாமரத்துப்பட்டிய... மேலும் பார்க்க

ரூ.2.62 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.2.62 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் ஊா்வலம்

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. கொடைக்கானல் ஏரிச் சாலை கலையரங்கம் பகுதியில் கிறிஸ்தவா்கள் சாா்பில், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னா், க... மேலும் பார்க்க

கொடைக்கானலில் உறைபனி

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை கடும் உறைபனி நிலவியதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா். கொடைக்கானலில் பொதுவாக நவம்பா் முதல் பிப்ரவரி வரை கடும் பனிப் பொழிவு நிலவும். தற்போது, பருவநிலை மாற்றம் கா... மேலும் பார்க்க

நிலம் வேறொருவா் பெயருக்கு மாற்றம்: பத்திரப் பதிவு அலுவலகம் முற்றுகை

திண்டுக்கல் அருகே 94 சென்ட் நிலத்தை வேறொருவா் பெயருக்கு மாற்றி பத்திரப் பதிவு செய்துவிட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்டவா்கள் பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தி... மேலும் பார்க்க