எல்லா பாடங்களிலும் FAIL... தேர்வெழுதிய மாணவிக்கு அதிர்ச்சி - 10th தேர்வு முடிவில் நடந்த குளறுபடி!
குஜராத் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 8ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் சோட்டா உதேபூரில் வசிக்கும் அகிக்ஷா பர்மர் என்ற மாணவி தனது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்த்து அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ளார்.
அகிக்ஷா பர்மர் என்ற பத்தாம் வகுப்பு மாணவி அனைத்து தேர்வுகளையும் எழுதி இருந்த நிலையில், அவர் ஆப்சென்ட் ஆகி தேர்வில் தோல்வி அடைந்ததாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மாணவியின் தந்தை திரத்சிங் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “எனது மகள் தேர்வுக்கு வராமல் ஆப்சென்ட் என பதிவிட்டு தேர்வில் தோல்வி அடைந்ததாக முடிவுகள் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
எனது மகளை ஒவ்வொரு தேர்விற்கும் தேர்வு மையத்தில் இறக்கிவிட்டது நான்தான். அவர் எல்லாத் தேர்வுகளையும் முறையாக எழுதி உள்ளார். ஆனால் இது போன்று நடப்பது எப்படி சாத்தியம்? இதற்கு முறையாகக் கல்வித்துறை அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் தெரிவித்த நிலையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளியில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்தபோது, மாணவி அனைத்து பாடங்களுக்கானத் தேர்வுகளையும் எழுதி இருப்பது உறுதியானது.
இதனால் சோட்டா உதேபூர் மாவட்ட கல்வி அதிகாரி (DEO) ஆனந்த் பர்மர், தேர்வு மேற்பார்வையாளர் ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர் உட்பட ஆறு பேருக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வுக்கு வராத மாணவருக்கு 52% மதிப்பெண்களுடன் தேர்ச்சி எனவும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது போன்ற அஜாக்கிரதையானச் செயலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட அகிக்ஷா பர்மர் என்ற மாணவியின் தேர்வு முடிவுகள் சரிபார்க்கப்பட்டு, சில நாட்களில் சரியான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடபடும் என்று கல்வித்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs