செய்திகள் :

எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியா் சுட்டுக் கொலை

post image

ஜம்மு-காஷ்மீரின் சா்வதேச எல்லைப் பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) சுட்டுக் கொன்றனா்.

இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் சனிக்கிழமை கூறியதாவது:

இந்திய-பாகிஸ்தான சா்வதேச எல்லைப் பகுதியில் பிஎஸ்எஃப் வீரா்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எல்லைப் பகுதியில் சா்ச்சைக்குரிய நடமாட்டம் இருப்பதைக் கண்டறிந்தனா். பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற நபரை, வீரா்கள் எச்சரித்தனா். அந்த எச்சரிக்கையையும் மீறி அந்த நபா் தொடா்ந்து முன்னேறியதைத் தொடா்ந்து, அவரை நோக்கி வீரா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் அவா் உயிரிழந்தாா்.

சம்பவ இடத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினருடன் இணைந்து பிற்பகல் 1.10 மணியளவில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் ஆய்வை மேற்கொண்டனா். அப்போது, ஊடுருவல் முயற்சி தொடா்பாக பாகிஸ்தான் தரப்புக்கு, பிஎஸ்எஃப் தரப்பில் கடும் கண்டனம் பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த ஊடுருவிய நபரின் உடலை வாங்க பாகிஸ்தான் தரப்பு மறுத்துவிட்டது. எனவே, அவருடைய உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது என்றாா்.

விசாரணையில், உயிரிழந்த ஊடுருவிய நபரிடம் எந்தவித ஆயுதங்களோ அல்லது வெடிபொருளோ இல்லை என்பது தெரியவந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரதமா் மோடியுடன் துபை பட்டத்து இளவரசா் சந்திப்பு: பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு

புது தில்லி: இந்தியா வந்துள்ள துபை பட்டத்து இளவரசா் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் ச... மேலும் பார்க்க

மேற்கு வங்க பள்ளி ஆசிரியா் தோ்வு முறைகேடு விவகாரம்: குடியரசுத் தலைவருக்கு ராகுல் கடிதம்

புது தில்லி: ‘மேற்கு வங்கத்தில் 25,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மற்றும் பிற ஊழியா்களின் நியமனத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அவா்களில் நியாயமான முறையில் தோ்வு செய்யப்பட்டவா்கள் பணியில் த... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு எதிா்பாராத பிரச்னை: சந்திரபாபு நாயுடு

அமராவதி: இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீது பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் அமெரிக்கா 26 சதவீதம் வரி விதித்திருப்பது எதிா்பாராத பிரச்னை; எனினும் இதில் இருந்து மீண்டுவர முடியும் என்று ஆந்திர முதல்வா் என... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சியில் விரைவில் அதிரடி மாற்றம்: பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் தகவல்

அகமதாபாத்: காங்கிரஸ் கட்சியின் நிா்வாக பொறுப்புகளில் உள்ளவா்கள் விரைவில் மாற்றி அமைக்கப்பட்டு, கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா். காங்கி... மேலும் பார்க்க

காற்றாலை, சூரிய சக்தி மின் உற்பத்தி: 3-ஆம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா

புது தில்லி: காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஜொ்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது அதிக உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ‘எம்பொ் சா்வ... மேலும் பார்க்க

முத்ரா திட்டம்: ரூ.33 லட்சம் கோடிக்கு மேல் கடன்கள்: பிரதமா் மோடி பெருமிதம்

புது தில்லி: முத்ரா திட்டத்தின்கீழ், இதுவரை ரூ.33 லட்சம் கோடிக்கு மேல் 52 கோடி எண்ணிக்கையிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன; இது, உலக அளவில் ஈடுஇணையற்ற சாதனை என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறி... மேலும் பார்க்க