பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி
எஸ்பிஐ வங்கியில் 122 மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள 122 மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்களை பார்ப்போம்:
பணி: Manager (Credit Analyst)
காலியிடங்கள்: 63
சம்பளம்: மாதம் ரூ.85,920 - 1,05,280
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் நிதியியல் பிரிவில் எம்பிஏ, சிஏ, சிஎப்ஏ, ஐசிடபுள்யுஏ தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Manager (Products-Digital Platforms)
காலியிடங்கள்: 34
சம்பளம்: மாதம் ரூ.85,920 - 1,05,280
தகுதி: தகவல் தொழில்நுட்பம், கணின் அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு துறையில் பிஇ அல்லது பி.டெக் தேர்ச்சி அல்லது கம்பியூட்டர் அப்பிளிகேசனில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Deputy Manager
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.64,820 - 93,960
தகுதி: தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு துறையில் பிஇ அல்லது பி.டெக் தேர்ச்சி அல்லது கம்பியூட்டர் அப்பிளிகேசனில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.10.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.