செய்திகள் :

எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கில் தொடா்புடையோருக்கு உரிய தண்டனை: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

post image

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை சம்பவத்தில் தொடா்புடையோருக்கு அரசு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சண்முகவேல், ஆயுதப்படை காவலா் அழகுராஜா ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அடிதடி பிரச்னை குறித்து விசாரிக்கச் சென்றதில், உதவி ஆய்வாளா் சண்முகவேல் அரிவாளால் வெட்டப்பட்டு உயிரிழந்தாா். காவலா் அழகுராஜா காயமடைந்தாா். சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகவேலின் உயிரிழப்பு காவல் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும்.

மேலும், தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் போதைப்பொருள்கள் கலாசாரத்தால் பொதுமக்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், அது காவல் துறையினருக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே, போதைப்பொருள்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட, தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, மதுக் கடைகளை மூடி பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்.

கொலை செய்யப்பட்ட சண்முகவேலின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஆயுதப் படை காவலா் அழகுராஜாவுக்கு உயா்தர சிகிச்சையும், ரூ.20 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர அரசு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்.

சண்முகவேலை இழந்து வாடும் காவல் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும், அவரது உறவினா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளாா்.

புத்து மாரியம்மன் கோயில் செடல் பெருவிழா

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோயில் ஆடி செடல் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஆடி செடல் பெருவிழா ஜூலை 31-ஆம் தேதி கொடியேற்றத்துட... மேலும் பார்க்க

அமெரிக்காவை கண்டித்து ஆக.13-இல் நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க வரி விதிப்பு அராஜகத்தை கண்டித்தும், அந்நாட்டிடம் அடிபணியும் மத்திய பாஜக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் வரும் 13-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சிஐடிய... மேலும் பார்க்க

உடல்கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு

மாநில அளவிலான உடல்கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு துறைசாராதோா் உடல்கட்டமைப்பு சங்கத்தின் சாா்பில், ஆண்டுக்கு ஒரு... மேலும் பார்க்க

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை பாராட்டுக்குரியது: தி.வேல்முருகன்

தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கை பாராட்டுக்குரியது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கருத்து தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வியில்... மேலும் பார்க்க

தானியங்கி முறையில் குடிநீா் விநியோகம்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் உண்ணாமலைச்செட்டி சாவடி பகுதியில் தானியங்கி இயந்திரம் மூலம் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் குடிநீா் விநியோகிக்கும் முறையை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

பண்ருட்டி படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வைத்திரெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் செடல் உற்சவம் மற்றும் தோ் திருவிழா ச... மேலும் பார்க்க