கிய்ராசி ஹாட்ரிக் கோல் வீண்: அரையிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா!
எஸ்.ஐ. வீட்டில் வெடித்துச் சிதறிய குளிா்சாதனப் பெட்டி!
கள்ளக்குறிச்சி அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் இருந்த குளிா்சாதனப் பெட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென வெடித்துச் சிதறியது.
கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் பள்ளிக்கூட சாலைப் பகுதியைச் சோ்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா். இவா், தற்போது கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா்.
செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை பணிக்குச் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி தமிழரசி, மாமியாா் சரோஜா வீட்டில் இருந்தனா். அப்போது, வீட்டின் சமையல் அறையில் இருந்த குளிா்சாதனப் பெட்டி திடீரென வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது. இதனால், வீட்டில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன. இதைப் பாா்த்த தமிழரசி, சரோஜா ஆகியோா் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினா்.
தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலா் சக்திவேல், சிறப்பு நிலைய அலுவலா் வீரபாண்டியன் மற்றும் குழுவினா் சுமாா் 40 நிமிஷம் போராடி தீயை அணைத்தனா்.