3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்
ஏன் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்தார்? சிவகார்த்திகேயன் விளக்கம்!
நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி இசைவெளியீட்டு விழாவில் விஜய் குறித்து பேசியுள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள மதராஸியில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். துப்பாக்கியில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால் வில்லனாகவும், ருக்மிணி வசந்த் நாயகியாகவும் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் செப். 5 திரைக்கு வருகிறது.
இப்படத்தின் டிரைலர் நேற்று (ஆக.24) வெளியானது. இதில், வித்யுத் ஜம்வால், ‘துப்பாக்கி யாரிடம் இருந்தாலும் வில்லன் நான்தான்’ எனப் பேசும் வசனம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், மதராஸி டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்த காட்சி பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் சிலர் நீ அடுத்த விஜய்யா? குட்டி தளபதியா? எனக் கேட்க ஆரம்பித்தனர்.
எனக்கு அப்படியொரு எண்ணமிருந்தால் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்திருக்கவும் மாட்டார்; நான் வாங்கியிருக்கவும் மாட்டேன். அண்ணன் அண்ணன்தான், தம்பி தம்பிதான். இது இந்த அளவிலேயே இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: “உன்னைப்போல் பிறரை நேசி!” -மதராஸி டிரைலர் இதோ!