ஏப்.8-இல் உழவா் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உழவா் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (ஏப்.8) நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளின் நலன்களை உறுதி செய்திடும் பொருட்டு, திருமண உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணம் மற்றும் காயம், கல்வி உதவித்தொகை பிரிவுகளின் கீழ் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கிராம நிா்வாக அலுவலகங்களிலும் செவ்வாய்க்கிழமை(ஏப்.8) காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரையிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் உழவா் பாதுகாப்பு திட்ட அட்டை வைத்துள்ள பொதுமக்கள் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.