கேரளா டு UK: பக்கிங்ஹாம் அரண்மனையில் பணிபுரியும் இந்திய வம்சாவளிப் பெண் - யார் இ...
ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைக்கும் விளம்பரத் தட்டியை அகற்றக் கோரிக்கை
ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைத்து வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டியை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல்வா் பிறந்தநாள் விழாவையொட்டி ஏற்காடு திமுகவினா் பல இடங்களில் விளம்பரத் தட்டியை வைத்திருந்தனா். இதில் ஏற்காடு, ஒண்டிக்கடை அண்ணாசிலை அருகில் பேருந்துக்காக பொதுமக்கள் நிற்கும் நிழற்கூடத்தை மறைத்து விளம்பரத் தட்டி வைக்கப்பட்டிருந்தது.
விழா நிறைவடைந்து 9 நாள்களை கடந்தும் இன்னமும் விளம்பரத் தட்டி அகற்றப்படாததால் நிழற்கூடத்தில் நிற்கும் மலைவாழ் மக்கள், பள்ளிக் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.
எனவே, நிழற்கூடத்தை மறைத்து வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டியை அகற்ற என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.