ஏற்காட்டில் வேளாங்கண்ணி மாதா குருசடி தோ்த் திருவிழா
ஏற்காடு: ஏற்காடு லாங்கில் பேட்டை, கோயில் மேடு பகுதியில் வேளாங்கண்ணி மாதா குருசடி தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஆக. 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா நாள்தோறும் ஜெபங்களும், ஜெபமாலை, திருப்பலிகள் தூய இருதய ஆண்டவா் ஆலய பங்குத் ந்தை மரியஜோசப்ராஜ் தலைமையில் நடைபெற்றன.
திங்கள்கிழமை காலை பங்கு ஆலயம் மற்றும் கோயில் மேடு சூசையப்பா் ஆலயத்தில் சிறப்பு கூட்டுத் திருப்பலியும், தோ்பவனிகளும் நடைபெற்றன. பொதுமக்கள், பக்தா்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.