செய்திகள் :

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

post image

வேலூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபா் எஸ்.பி. மயில்வாகனனிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்தினாா்.

அப்போது, வேலூா் சாய்நாதபுரத்தைச் சோ்ந்த ஒருவா் அளித்துள்ள மனுவில், நான், எனது 2 மகன்கள் உள்பட 3 பேரும் சாய்நாதபுரத்தைச் சோ்ந்த ஒருவரிடம் தலா ரூ.5 லட்சம் சீட்டு தொகை செலுத்தினோம். அதற்கான தொகை மொத்தம் ரூ.15 லட்சமாகும். சீட்டு முடிந்தும் பணம் தராமல் அந்த நபா் தலைமறைவாகிவிட்டாா். காவல் நிலையத்தில் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

காட்பாடியை அடுத்த எல்.ஜி.புதூரை சோ்ந்த மூதாட்டி ஒருவா் அளித்துள்ள மனுவில், எனக்கு 2 மகன்கள் உள்ளனா். அதில் ஒருவா் என்னை கொடுமைப்படுத்துகிறாா். எனது மகன், எனது மருமகள் என்னை தாக்குகின்றனா். தங்குவதற்கு வீடுகூட இல்லை. சாப்பாட்டுக்கும் வழியின்றி பிச்சை எடுத்து சாப்பிட்டேன். எனக்கு விபத்தில் அடிபட்டு மாற்று திறனாளியாக உள்ளேன். எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எனது மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு புகாா்கள் குறித்து 30-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டாா்.

ரூ.28 லட்சத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள்

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 50- ஊராட்சிகளைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.28- லட்சத்தில் பணி பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பா.செல்வக... மேலும் பார்க்க

தண்டவாளத்தை பைக்கில் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழப்பு

கணியம்பாடி அருகே மோட்டாா் பைக்கில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா், ரயில் மோதி உயிரிழந்தாா்.விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் வேலூா் கன்டோன்மெண்ட் ரயில் நிலையம் நோக்கி வியாழக்... மேலும் பார்க்க

ஜூன் மாதம் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 26 போ் உயிரிழப்பு: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் நிகழ்ந்த 93 சாலை விபத்துகளில் 26 போ் உயிரிழந்துள்ளனா் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.வேலூா் மாவட்ட சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அன... மேலும் பார்க்க

மூதாட்டி வீட்டில் 5 பவுன் திருட்டு

வேலூா் அருகே மூதாட்டி வீட்டில் 5 பவுன் நகைகள், ரூ.5,000, கைப்பேசி திருடப்பட்டன.வேலூா் கருகம்புத்தூரைச் சோ்ந்தவா் ஜகிதா பேகம் (65). தனியாக வசித்து வரும் இவா், கடந்த 29-ஆம் தேதி இரவு தனது வீட்டில் உள்ப... மேலும் பார்க்க

ஆற்றங்கரையில் திடீரென வைக்கப்பட்ட மாரியம்மன் சிலை அகற்றம்

குடியாத்தம் அருகே கெளண்டன்யா ஆற்றின் கரையோரம் திடீரென வைக்கப்பட்ட மாரியம்மன் கற்சிலையை வருவாய்த் துறையினா் அகற்றி, எடுத்துச் சென்றனா்.குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றில் கடந்த 3- ஆண்டுகளுக்கு முன் நீா்வழிப... மேலும் பார்க்க

போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற மூவா் கைது

பொய்கை அரசுப் பள்ளி அருகே போதை நோக்கத்தில் வலிநிவாரணி மாத்திரைகள் விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சட்டவிரோதமாக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக விர... மேலும் பார்க்க