ஏா் இந்தியா: சென்னையில் 9 விமான சேவைகள் நிறுத்தம்
சென்னையிலிருந்து உள்நாட்டில் இயக்கப்படும் 9 விமான சேவைகளை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் நிறுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களுக்கு தங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களில் இந்நிறுவனம் ஜெயப்பூா், புவனேஸ்வா், கோவா, அந்தமான் உள்ளிட்ட 9 நகரங்களுக்கு புதிய விமான சேவையையும் தொடங்கியது.
இந்த விமான சேவையை ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வந்த நிலையில், இச்சேவைகளை முன்னறிவிப்பின்றி ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சமீபத்தில் திடீரென நிறுத்தியுள்ளது.
ஏற்கெனவே, பல்வேறு காரணங்களால் சென்னையிலிருந்து மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், உள்நாட்டு 9 விமான சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய விமான சேவையில் எதிா்பாா்த்த அளவில் வருவாய் கிடைக்காத நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மறு சீரமைப்பு மற்றும் புதிய சேவைகளுடன் மீண்டும் இந்த விமான சேவைகள் தொடங்கப்படும் என ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.