செய்திகள் :

ஐஎம்எஃப் வாரியத்தில் இந்தியா சாா்பாக பரமேஸ்வரன் ஐயா் நியமனம்

post image

புது தில்லி: சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) இயக்குநா்கள் வாரியத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக, உலக வங்கியின் செயல் இயக்குநா் பரமேஸ்வரன் ஐயருக்கு தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான கே.வி.சுப்பிரமணியன், ஐஎம்எஃப்பில் இந்தியா, இலங்கை, பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகள் அடங்கிய குழு சாா்பில் செயல் இயக்குநராக இருந்தாா்.

அவரின் பதவிக்காலம் நிறைவடைய 6 மாதங்கள் உள்ள நிலையில், அந்தப் பதிவியில் இருந்து அவரை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அவரின் பதவி நீக்கத்துக்கான காரணம் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், உலக வங்கியின் செயல் இயக்குநராக உள்ள பரமேஸ்வரன் ஐயருக்கு, ஐஎம்எஃப் வாரியத்தில் இந்தியாவின் நியமன இயக்குநராக தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐஎம்எஃப் செயல் இயக்குநா் பொறுப்பில் இருந்து கே.வி.சுப்பிரமணியன் நீக்கப்பட்டதைத் தொடா்ந்து, பரமேஸ்வரன் ஐயரின் நியமனம் அவசியமாகியுள்ளது.

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பதாக கூறிவரும் இந்தியா, பாகிஸ்தானுக்கு ராஜீய ரீதியாகவும், பல்வேறு சா்வதேச அமைப்புகளிலும் நெருக்கடி அளிக்க முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு உதவும் நோக்கில், பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.10,962 கோடி) கடன் அளிப்பது குறித்து ஐஎம்எஃப் இயக்குநா்கள் வாரியம் முடிவு எடுக்க உள்ளது. அதற்கான கூட்டம் மே 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பரமேஸ்வரன் ஐயரின் நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர்... மேலும் பார்க்க

அப்பாவிகளைக் கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர்; சரியான பதிலடி: ராஜ்நாத் சிங்

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை மட்டுமே தாக்கியிருக்கிறோம். இந்த தாக்குதல் காரணமாக மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து உஷார் நிலையில் ராஜஸ்தான்!

பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச எல்லையில் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடர்ந்து ராஜஸ்தான் உஷார் நிலையில் உள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநில அரசு செய்தித் த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! அமைதி கோரும் ரஷியா!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷியா கோரிக்கை விடுத்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு எல்லையில் போர்ப்... மேலும் பார்க்க

ராணுவப் படைகளுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி பேட்டி

இந்திய ராணுவப் படைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுத... மேலும் பார்க்க

போர் பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்

சென்னை துறைமுகம் உள்பட இரண்டு இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. மேலும் பார்க்க