செய்திகள் :

பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து உஷார் நிலையில் ராஜஸ்தான்!

post image

பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச எல்லையில் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடர்ந்து ராஜஸ்தான் உஷார் நிலையில் உள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநில அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,

பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ராஜஸ்தானின் கங்காநகர், பிகானர், ஜெய்சால்மர், பார்மர் ஆகிய எல்லை மாவட்டங்களில் உஷார் நிலையில் உள்ளதாகவும், சிறப்பு அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அமைதியாக இருக்கவும், வதந்திகளுக்குச் செவிசாய்க்க வேண்டாம்.

முதல்வரின் நடவடிக்கையைத் தொடர்ந்து மாநிலத்தின் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். தலைமைச் செயலாளர் சுதன்ஷ் பந்த், காவல்துறை இயக்குநர் ஜெனரல் யு.ஆர். சாஹு ஆகியோருடன் முதல்வர் தொடர்ந்து தொடர்பில் உள்ளார், மேலும் மாநில அரசும் நிர்வாகமும் மிகுந்த உஷார் நிலையில் உள்ளன.

மேலும் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களை முதல்வர் வரவேற்றார். மேலும் முப்படைகளையும் அவர் பாராட்டினார்.

இந்தியாவின் சார்பில் நடத்தப்படும் ஆப்ரேஷன் சிந்தூர் அனைத்து அரசியல் தலைவர்கள் மத்தியிலும் வரவேற்பு பெற்றுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 முகாம்களை அழித்து, பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

நிலவில் இந்திய விண்வெளி வீரா்கள் தடம் பதிப்பா்: பிரதமா் நம்பிக்கை

‘விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியா புதிய நம்பிக்கையுடன் பீடு நடை போடுகிறது; 2040-ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்திய விஞ்ஞானிகள் கால்தடம் பதிப்பா்’ என்று பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்தாா். உலக விண்வெளி ... மேலும் பார்க்க

‘ஆப்பரேஷன் சிந்தூா்’: தகா்க்கப்பட்ட 9 பயங்கரவாத கட்டமைப்புகள்

‘ஆப்பரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள 4 பயங்கரவாத நிலைகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாத நிலைகளை விரிவான உளவுத் தகவல்களின் அடிப்படையில் துல்லியமாக தோ... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ - இந்தியா ஏவுகணைத் தாக்குதல் முழு விவரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள... மேலும் பார்க்க

18 இந்திய விமான நிலையங்கள் தற்காலிக மூடல்

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகான வான்வெளி கட்டுப்பாடுகளால், ஸ்ரீநகா் உள்பட 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புதன்கிழமை 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவலறி... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவை பாராட்டு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வெற்றிகரமாக தாக்குதலை நடத்திய இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ‘ஆப்ப... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ பஹல்காம் தாக்குதலுக்கு பாரதத்தின் பதிலடி -அமித் ஷா

‘பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ எனும் அதிதுல்லியத் தாக்குதல், பஹல்காமில் நமது அப்பாவி சகோதரா்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி’ என்று மத்திய... மேலும் பார்க்க