ஐசிஆர்ஏ நிகர லாபம் 30 சதவிகிதம் அதிகரிப்பு!
புதுதில்லி: நடப்பு நிதியாண்டின், டிசம்பர் காலாண்டில், வரிக்கு பிந்தைய லாபமாக ஐசிஆர்ஏ (ICRA) நிறுவனத்தின் லாபம் 30 சதவிகிதம் அதிகரித்து ரூ.42.22 கோடி ஆக உள்ளது.
ஒருங்கிணைந்த அடிப்படையில், உள்நாட்டு மதிப்பீட்டு நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் முந்தைய நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் இது ரூ.32.41 கோடியாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஐசிஆர்ஏ (ICRA) நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.131.76 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.139.72 கோடியானது.
ஐசிஆர்ஏ பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று 2.84 சதவிகிதம் சரிந்து ரூ.6,089 ஆக முடிவடைந்தது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.50 ஆக முடிவு!