ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை முதல்முறையாக வென்ற அலானா கிங்..!
சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஒவ்வொரு மாதமும் ஐசிசி விருது வழங்கப்படுகிறது.
பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி விருதுக்குரிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பெண்கள் பிரிவில் அலானா கிங் (ஆஸ்திரேலியா), அனபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா), திபாட்சா புத்தாவோங் (தாய்லாந்து) இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் அலானா கிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அலானா கிங் (ஆஸ்திரேலியா)
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகி விருது வென்றார்.
மெல்பர்னில் நடைபெற்ற ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதுமட்டுமின்றி 3 கேட்ச்சுகளையும் பிடித்து அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு வடிவங்களில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 16-0 என ஆஸி. மகளிர் வென்றது குறிப்பிடத்தக்கது.
Spinning her side to victory in style
— ICC (@ICC) March 12, 2025
Alana King's stunning display in the one-off Women's Ashes Test earns her the ICC Women's Player of the Month for February 2025
More➡️https://t.co/U7WtV4pdmbpic.twitter.com/aVY8o5g6g5