செய்திகள் :

ஐசிசியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்ற இலங்கை வீரர்!

post image

ஐசிசியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இலங்கை அணியின் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களில் ஒருவருக்கு ஐசிசியின் சார்பில், வளர்ந்து வரும் வீரருக்கான விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினை இலங்கை அணியின் இளம் வீரரான கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார்.

அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து கமிந்து மெண்டிஸ் கடந்த ஆண்டில் மட்டும் 1,451 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 50-க்கும் சற்று அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டுக்கு முன்பாக இலங்கை அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியிருந்த கமிந்து மெண்டிஸ், தற்போது இலங்கை அணியில் தனக்கென அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.

இதையும் படிக்க: ஜோஃப்ரா ஆர்ச்சரை குறிவைத்தது ஏன்? திலக் வர்மா பதில்!

நடுவரிசை ஆட்டக்காரரான கமிந்து மெண்டிஸ் கடந்த ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,049 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 74.92 ஆக உள்ளது. கடந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் நடுவரிசை ஆட்டக்காரர்கள் 6 பேர் 1000-க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளனர். அதில் கமிந்து மெண்டிஸும் ஒருவர். கடந்த ஆண்டில் மட்டும் கமிந்து மெண்டிஸ் 5 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த வீரர்களில் ஒருவராகவும் அவர் மாறினார்.

மறக்க முடியாத இன்னிங்ஸ்

கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாடியது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி இளம் வீரர் கமிந்து மெண்டிஸுக்கு மறக்க முடியாத போட்டியாக அமைந்தது.

இதையும் படிக்க: மகளிர் டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!

இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் 182 ரன்கள் (250 பந்துகள் - 16 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) குவித்து அசத்தினார். அந்தப் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் எடுத்தது.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் இலங்கை அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

டபிள்யூபிஎல்: குஜராத் அணி கேப்டனாக ஆஸி. வீராங்கனை தேர்வு!

டபிள்யூபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டனாக ஆஸி. வீராங்கனை ஆஷ்லி கார்ட்னர் தேர்வாகியுள்ளார்.27 வயதாகும் ஆஷ்லி கார்ட்னர் ஆஸி. ஆல்-ரவுண்டராக இருக்கிறார். இதற்கு முன்பு ஆஸி.யின் பெத் மூனி பேட்டிங... மேலும் பார்க்க

38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்த அபிஷேக் சர்மா..! ஐசிசி டி20 தரவரிசையில் அசத்தல்!

ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்துள்ளார் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா. இங்கிலாந்து உடனான 5ஆவது டி20 போட்டியில் அதிரடியாக சதமடித்த அபிஷேக் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தா... மேலும் பார்க்க

காயத்தால் விலகிய மார்ஷுக்கு பதிலாக பிக்-பாஸ் நாயகன்! ரிக்கி பாண்டிங் பரிந்துரை!

காயத்தால் விலகிய மார்ஷுக்கு பதிலாக பிக்-பாஸ் நாயகனான இளம்வீரரை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பரிந்துரைத்துள்ளார்.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் ... மேலும் பார்க்க

கம்மின்ஸ் காயம்: சாம்பியன்ஸ் டிராபி ஆஸி. அணியின் புதிய கேப்டன் யார்?

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால் ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப... மேலும் பார்க்க

சென்னை சிங்கம்ஸ் அதிரடி வெற்றி

ஐஎஸ்பிஎல் தொடரின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் ஃபால்கன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை சிங்கம்ஸ். தெருவோர சிறுவா்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் டி... மேலும் பார்க்க

வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து சிறப்பாக செயல்படும்: கெவின் பீட்டர்சன்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும... மேலும் பார்க்க