வில் ஜாக்ஸ் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 156 ரன்கள் இலக்கு!
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் கேமராவில் மாற்றம் செய்கிறது ஆப்பிள்?
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் கேமராவில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அறிமுகமாகும் நிலையில், மற்ற ஐபோன்களில் இருந்து வேறுபட்டிருக்கும் வகையில் முன்பக்கம் மற்றும் பின்பக்க கேமராவில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதுமே வாடிக்கையாளர்கள் உள்ளனர். தரம் மற்றும் நம்பகத்தன்மைக்காக பலர் ஆப்பிள் பிராண்டு தயாரிப்புகளை விரும்புகின்றனர்.
இந்த ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அறிமுகமாகவுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான ஐபோன் 16 வேரியன்ட்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது அடுத்தகட்ட ஸ்மார்ட்போனை ஆப்பிள் வெளியிடுவதால், அதில் என்னென்ன அம்சங்கள் கூடுதலாக இடம்பெற்றிருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.
கேமராவில் மாற்றம்
உலகம் முழுவதுமே ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், கேமராவில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதாவது, மிகக் குறைவான வெளிச்சத்திலும் மேம்படுத்தப்பட்ட ஜூம் அம்சங்களைப் பெறும் வகையில் லென்ஸ்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கேமராவையும் அதில் எடுக்கும் புகைப்படங்களையும் மேம்படுத்தும் வகையில் சிறப்பு மென்பொருள்களையும் பயன்படுத்தவுள்ளது.
கேமரா வடிவமைப்பில் புதிய அணுகுமுறையையும், மொபைல் போட்டோகிராஃபிக்கு சிறப்பிடம் கொடுத்தும் புதிய அம்சங்கள் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரு வகைகளிலும் இந்த மாற்றங்கள் இடம்பெறவுள்ளது.