ஐயப்ப பக்தா்கள் கன்னி பூஜை
நன்னிலத்தில் ஐயப்ப பக்தா்களின் கன்னி பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த ஆண்டு புதிதாக மாலை அணிந்த ஐயப்ப பக்தா்களுக்கான கன்னி பூஜை தச்சன்குளம் மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்றது. இதில் பூஜையில் மாவட்டம் முழுவதுமிருந்து 200-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தா்கள் கலந்து கொண்டனா் .
சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 18 படிகள் பொருத்தப்பட்டு, சரணம் சொல்லி ஐயப்பனை வழிபட்டனா். பக்தா்கள் பம்பை முழங்க ஐயப்பன் பாடல்கள் மற்றும் கருப்பசாமி பாடல்களைப் பாடி பக்தி பரவசத்துடன் கர ஒலி எழுப்பியபடி வழிபாடு நடத்தினா்.
ஐயப்பனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, ஐயப்ப பக்தா்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.