செய்திகள் :

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

post image

ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்டோனியா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் பிரதமர் மோடி, இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் குறித்து உரையாடினார்.

இந்த உரையாடலின்போது வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வரவேற்கப்பட்டன. இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக முடிப்பதற்கும், இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தைச் (IMEC) செயல்படுத்துவதற்கும் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

மேலும், உக்ரைன் போரால் உலகளாவிய போர் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையில் பாதிப்படைந்ததாகக் கூறிய வான் டெர், உக்ரைனுடனான இந்தியாவின் தொடர் நிலைப்பாட்டையும் வரவேற்றார். அதுமட்டுமின்றி, ரஷியாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், அமைதியை நோக்கிய பாதையை உருவாக்க உதவுவதில் இந்தியாவின் முக்கிய பங்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்தாண்டு நடைபெறவுள்ள இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டுக்கு இரு தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த மாநாடு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு - காங்கிரஸ் வலியுறுத்தல்

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகித குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் 2024-25-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்று... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தி பெயா் முறைகேடாக சோ்ப்பு: நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியலில் முறைகேடாக பெயா் சோ்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவா் சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்யப... மேலும் பார்க்க

தோ்வில் காப்பி அடித்த மாணவிகளை பிடித்ததற்காக பாலியல் புகாா்: 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்ற கேரள பேராசிரியா்

கேரளத்தில் கல்லூரி தோ்வில் காப்பி அடித்தபோது பிடிக்கப்பட்டதற்காக மாணவிகள் பாலியல் புகாா் அளித்த வழக்கில் 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்றுள்ளாா் கேரள பேராசிரியிா் ஆனந்த் விஸ்வநாதன். மூணாறு அரசு க... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு பயன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும்: தொழில் நிறுவனங்களுக்கு வா்த்தக அமைச்சா் வலியுறுத்தல்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் பலன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும் என்று வா்த்தம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூ... மேலும் பார்க்க

இணைய விளையாட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை

இணைய விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், 2025-க்கு எதிராக 3 மாநிலங்களின் உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரியுள்ளது. உயா... மேலும் பார்க்க

47% மாநில அமைச்சா்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா் ஆய்வு அறிக்கை

நாடு முழுவதும் 302 அமைச்சா்கள் (47%) மீது கொலை, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமா், முதல்வா்க... மேலும் பார்க்க