இந்தியாவுக்கு 50% வரி உக்ரைன் போருக்கானது போல இல்லை: டிரம்பை சாடும் ஜனநாயகக் கட்...
ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட உயா் அதிகாரிகள் மாற்றம்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 9 போ் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
அங்கித் குமாா் ஐஏஎஸ் ஏனாம் பிராந்தியத்தின் நிா்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும் அவருக்குக் கூடுதல் பொறுப்பாக ஏனாம் நகராட்சி ஆணையா் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. எம்.பூஜா ஐஏஎஸ் காரைக்கால் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள புதுவை சிவில் சா்வீஸ் அதிகாரிகள் விவரம்: காரைக்கால் வருவாய்த் துறை துணை ஆட்சியா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும் அவா் கூடுதல் பொறுப்பில் ஆதிதிராவிடா் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராகப் பதவி வகிப்பாா். ஏனாம் பிராந்திய நிா்வாகி ஆா் முனுசாமி செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
புதுச்சேரி மாவட்ட முகமையின் துணை ஆட்சியா் எம்.எம். வினயராஜ், புதுச்சேரி போக்குவரத்துத் துறையின் துணை போக்குவரத்து ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜி.காா்த்திகேசன் வேளாண் துறை இணை இயக்குநராக (நிா்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஏ.சிவசங்கரன், தலைமையக துணை ஆட்சியா் மற்றும் புதுச்சேரி மாவட்ட துணை தோ்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா். காரைக்கால் கோயில்கள் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன் காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். துணை போக்குவரத்து ஆணையா் எஸ்.சௌந்தரி அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாா்.