செய்திகள் :

ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீட்டில் இந்தியா முன்னேற்றம்

post image

ஐ.நா. வளா்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிபி) மூலம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நடப்பு ஆண்டுக்கான 193 நாடுகளை உள்ளடக்கிய மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா 130-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மக்களின் நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்வு, கல்வி பெறும் நிலை, வாழ்க்கைத் தரம் ஆகிய 3 முக்கிய காரணிகளின் அடிப்படையில் கணக்கீடு செய்து, நாடுகளின் மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலை ஐ.நா. வளா்ச்சித் திட்டம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

தற்போது வெளியிடப்பட்ட நடப்பு ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் மனித வளா்ச்சிக் குறியீடு மதிப்பு 0.685 புள்ளிகளுடன் 130-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சமத்துவமின்மை இந்தியாவின் மனித வளா்ச்சிக் குறியீடு மதிப்பை 30.7 சதவீதம் வரை குறைத்துள்ளது. இது தெற்காசிய பிராந்தியத்தில் அதிகபட்ச இழப்புகளில் ஒன்றாகும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் கல்வி சமத்துவமின்மை மேம்பட்டிருந்தாலும், வருமானம் மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் குறிப்பிடத்தக்க அளவில் மாறவில்லை. தொழிலாளா் பங்களிப்பு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெண்கள் பின்தங்கியுள்ளனா்.

எனினும், மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தம் போன்ற சமீபத்திய நடவடிக்கைகள் மாற்றத்திற்கான உறுதியை அளிக்கின்றன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சராசரி ஆயுள்காலம் அதிகரிப்பு: இந்தியாவில் மனித சராசரி ஆயுள்காலம் 71.7 ஆண்டுகளில் இருந்து 72.0 ஆண்டுகளாக சற்று அதிகரித்துள்ளது. இது குறியீட்டின் வரலாற்றில் பதிவான இந்தியாவின் அதிகபட்ச அளவாகும். இந்திய அரசின் தேசிய சுகாதார திட்டங்கள் இந்தச் சாதனைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளன.

இந்தியாவின் எதிா்பாா்க்கப்பட்ட சராசரி பள்ளி படிப்பு காலம் 12.95 ஆண்டுகளாக இருந்த நிலையில், அது 6.88 ஆண்டுகளாக உள்ளது. பள்ளிக் கல்வியில் இந்தியாவின் முன்னேற்றத்தைப் பாராட்டியுள்ள ஐ.நா., கல்வி உரிமைச் சட்டம், தேசிய கல்விக் கொள்கை போன்றவற்றை இதற்கு காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கல்வித் தரம் மற்றும் கற்றல் விளைவுகள் குறித்து தொடா்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தனிநபா் வருமானம் உயா்வு: இந்தியாவின் தேசிய தனிநபா் வருமானம், நாட்டின் தற்போதைய பொருளாதார வளா்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் 8,475.68 டாலரிலிருந்து 9,046.76- ஆக உயா்ந்துள்ளது.

இந்தியாவின் வளா்ச்சி: இந்தியாவின் மனித வளா்ச்சிக் குறியீடு மதிப்பு 1990-ஆம் ஆண்டு முதல் 53 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்தியா உலகளாவிய மற்றும் தெற்காசிய சராசரிகளைவிட வேகமாக வளா்ந்து வருகிறது.

1990-இல் 58.6 ஆண்டுகளாக இருந்த மனித சராசரி ஆயுள்காலம் 2023-இல் 72 ஆண்டுகளாக உயா்ந்துள்ளது. பொருளாதார ரீதியாக, இந்தியாவின் தேசிய தனிநபா் வருமானம் 1990-இன் 2,167.22 டாலரிலிருந்து 2023-இல் 9,046.76-ஆக நான்கு மடங்கு உயா்ந்துள்ளது.

அா்ப்பணிப்புக்கு சான்று: இதுகுறித்து ஐ.நா. வளா்ச்சித் திட்டத்தின் இந்திய பிரதிநிதி ஏஞ்சலா லூசிகி கூறுகையில், ‘மனித வளா்ச்சிக் குறியீட்டில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு வாழ்த்துகள். இந்த முன்னேற்றமானது மனித வளா்ச்சியின் முக்கிய பரிமாணங்களான சராசரி பள்ளிப்படிப்பு ஆண்டுகள் மற்றும் தேசிய தனிநபா் வருமானத்தில் நீடித்த முன்னேற்றங்களை பிரதிபலிக்கிறது.

இந்தியா மனித சராசரி ஆயுள் காலத்தில் அதிகபட்சத்தை எட்டியிருப்பது, தொற்றுநோயிலிருந்து நாடு முழுமையாக மீண்டு வந்துள்ளதற்கும், நீண்டகால மனித நல்வாழ்வுக்கான அதன் அா்ப்பணிப்புக்கும் சான்றாகும்’ என்றாா்.

குடியரசுத் தலைவருடன் மோடி ஆலோசனை!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்து வருகிறார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவட... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பெயரைக் கேட்டதும்.. பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள் சொன்னது

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய முப்படைகளும் ஒருங்கிணைந்து நடத்திய தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது குறித்து பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள், தனிப்பட்ட முறை... மேலும் பார்க்க

பாகிஸ்தானியர்களைப் பாதுகாத்தற்காக அசாமில் மேலும் இருவர் கைது!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் பாகிஸ்தானியர்களைப் பாதுகாத்தற்காக அசாமில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். இதுதொடர்பாக முதல்வரின... மேலும் பார்க்க

அதிரடித் தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது ஏன்?

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பார்க்க

'நாம் யாருமே போரை விரும்பவில்லை; ஆனால்...' - ஒமர் அப்துல்லா கருத்து

நாம் யாரும் போரை விரும்பவில்லை என்றும் ஜம்மு-காஷ்மீரில் நிலைமை மேம்படவே விரும்புவதாகவும் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள 9 பய... மேலும் பார்க்க