திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் நகை, பணம் மோசடி: தனியாா் நிறுவன மேலாளா் ...
குடியரசுத் தலைவருடன் மோடி ஆலோசனை!
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்து வருகிறார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஸ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து, செவ்வாக்கிழமை நள்ளிரவில் இந்திய முப்படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நேரில் சென்றுள்ள பிரதமர் மோடி, திரெளபதி முர்முவிடம் விளக்கம் அளித்து வருகிறார்.
இந்த சந்திப்பில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாகவும் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தினால், அதனை முறியடிக்க செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.