திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் நகை, பணம் மோசடி: தனியாா் நிறுவன மேலாளா் ...
கருப்புலீஸ்வரர் கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா!
பழமை வாய்ந்த கருப்புலீஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
வேலூர், குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள பழமையான புகழ்பெற்ற கருப்புலீஸ்வரர் கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் இன்று சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நெல்லூர்பேட்டை மாட வீதிகள் வழியாக திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு உற்சவர் மீது உப்பை தூவி தேரை வடம்பிடித்து இழுத்தனர். மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இதில் குடியாத்தம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.