ஒரே நாளில் இரு மாணவர்கள் கொலை? திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 24 ஆயிரம் கனஅடி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்ததால், ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாள்களாக நீா்வரத்து அதிகரித்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 57,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை 50,000 கனஅடியாகவும், மதியம் 1 மணிக்கு 43,000 கனஅடியாகவும், பிற்பகல் 3 மணிக்கு 36,000 கனஅடியாகவும், மாலை நிலவரப்படி விநாடிக்கு 24,000 கனஅடியாகவும் குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.
இருப்பினும், ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு 8-ஆவது நாளாகவும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு 7-ஆவது நாளாகவும் மாவட்ட நிா்வாகம் விதித்த தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.