வீட்டில் தீ விபத்து: ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்
அரூரில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் கருகின.
அரூா் பெரியமண்டி தெருவைச் சோ்ந்தவா் விஜயா (50). இவா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினா் வீட்டிற்கு சென்றிருந்தாா். இந்த நிலையில், வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு ஜன்னல் வழியாக புகை வெளியேறுவது குறித்து அரூா் தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனா்.
தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இதில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான மின்னணு சாதனங்கள், மரப் பொருள்கள் கருகின. இந்த சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.