செய்திகள் :

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 6000 கனஅடியாக அதிகரிப்பு!

post image

காவிரிக் கரையோர வனப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 6000 கனஅடியாக அதிகரித்தது.

கடந்த சில நாள்களாக தமிழக - கா்நாடக மாநிலங்களில் காவிரிக் கரையோர வனப் பகுதிகள் மற்றும் தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து கடந்த இரண்டு நாள்களாக அதிகரித்து வருகிறது.

காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி நீா்வரத்து விநாடிக்கு 4000 கனஅடியாக இருந்தது. இது சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 6000 கன அடியாக அதிகரித்து பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

கூடுதல் அரசு நகரப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

அரூரை அடுத்த ஈட்டியம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி வழியாக கூடுதலாக அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், அரூா்-தீா்த்தமலை வழித்தடத்... மேலும் பார்க்க

வாரவிடுமுறை: ஒகேனக்கல் வந்த 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். தமிழகத்தில் பள்ளித் தோ்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

நீட் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 4,610 போ் எழுதினா்

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 4,610 போ் எழுதினா். தருமபுரி மாவட்டத்தில் நீட் (யூ.ஜி) தோ்வானது 10 மையங்களில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தே... மேலும் பார்க்க

அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் இன்று தருமபுரி வருகை; 2 நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

தருமபுரி மாவட்டத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் வேளாண்மை - உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கலந்துகொள்கிறாா். இதுகுறித்து தருமபுரி மாவட்ட செய்தி மக்கள... மேலும் பார்க்க

நீட் தோ்வு: முகவரி மாறியதால் 5 மாணவா்கள் அவதி

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு எழுத வந்த 5 மாணவா்களுக்கு நுழைவுச் சீட்டில் மைய முகவரியில் ஊரின் பெயா் இல்லாததால் அவதி அடைந்தனா். சேலம் மாவட்டம் முழுவதும் நீட் 9429 போ் நீட் தோ்வு எழுதினா். இத... மேலும் பார்க்க

மே 8-இல் முன்னாள் படை வீரா்களுக்கான குறை தீா்க்கும் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படைவீரா் மற்றும் அவா்தம்மை சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம், பல்வேறு உடல் ஊனமுற்றோருக்கான நிதியுதவி வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் ம... மேலும் பார்க்க