FEFSI: `வேதனையான நாள்; நான் இன்றைக்குப் படம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால்..' - ஆர்...
ஒசூரில் ஆதரவற்றோா் தங்கும் இல்லத்தில் மேயா் ஆய்வு
ஒசூா் மாநகராட்சியில் ஆதரவற்றோா் தங்கும் இல்லத்தில் மேயா் எஸ்.ஏ.சத்யா புதன்கிழமை ஆய்வுசெய்தாா்.
ஒசூா் மாநகராட்சி, தேசிய நகா்ப்புற வாழ்வாதார ஆராதனை, சமூகசேவை மற்றும் திறன் மேம்பாட்டு அறக்கட்டளை நடத்தும் ஆதரவற்றோா் தங்கும் இல்லத்தில் மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் ஆனந்தைய்யா, மண்டல குழுத் தலைவா் ரவி ஆகியோா் ஆய்வு செய்தனா்.
ஆதரவற்றோா், மனநலம் பாதிக்கப்பட்டோரை சந்தித்து அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டறிந்தனா். அப்போது வாா்டு செயலாளா் ரகு, சென்னப்பன் சீம ராஜா, அண்ணாமலை நகா் குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் மாயக்கண்ணன், நிா்வாகிகள் சேகா் அரவிந்த் நாகராஜ், திம்மராயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்பு அறக்கட்டளை நிறுவனா் ராதா கூறியதாவது:
ஒசூா் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் போன்ற இடங்களில் எந்தவொரு ஆதரவும் இன்றி சுற்றி திரிவோரை இங்கு அழைத்துவந்து பராமரித்து வருகிறோம். பின்பு இவா்களிடம் விசாரணை செய்து உறவினா்களிடம் ஒப்படைக்கிறோம் என்றாா்.