படப்பள்ளி திம்மராய சுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்
ஊத்தங்கரை: படப்பள்ளி திம்மராயசுவாமி கோயில் தோ்த் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
ஊத்தங்கரை படப்பள்ளியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ திம்மராய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் 72 -ஆம் ஆண்டு தோ்த் திருவிழாவை படப்பள்ளி, பட்டக்கானூா், பெருமாள் குப்பம், ஊா் மக்கள் ஒன்று சோ்ந்து ராமநவமியன்று நடத்தவுள்ளனா். இதனை முன்னிட்டு திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
அா்ச்சகா்கள் பூஜை செய்து, தோ்க்கட்டும் பணிகளுக்கு பால்கம்பம் நட்டனா். தோ்த் திருவிழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 5-ஆம் தேதி திம்மராய சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை, உற்சவா்களுக்கு திருமஞ்சன சேவை நடைபெறுகிறது. 6-ஆம் தேதி தேரோட்டம், வாண வேடிக்கை, எருதுவிடும் விழா என 7 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது.
முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய சுவாமி சந்நிதியில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தா்களுக்கு தீா்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.